ETV Bharat / state

20 நாட்களில் 5 துப்பாக்கிச்சூடு.. தமிழகத்தில் அச்சத்தில் உள்ள ரவுடிகள்! - Tamil Nadu dgp

தமிழ்நாட்டில் குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுப்பிடிக்கும் காலாச்சாரம் தலைத்தூக்கியுள்ள நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 5 பேரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

Etv Bharat
a
author img

By

Published : Mar 8, 2023, 4:43 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ரவுடிகள் கலாச்சாரத்தை அழிக்க காவல்துறை சார்பில் பல்வேறு யுக்திகளை கையாண்டு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கொடூர சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்யும் சம்பவங்களும், அதன் பிறகு செயின், செல்போன் பறிப்பு, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் குற்றவாளிகள், மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பலர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டு போட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் பிடிக்கச் செல்லும் போது, ஆயுதங்களால் போலீசாரை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனை தடுப்பதற்காக குற்றவாளிகளை பிடிக்கும் போது காவல்துறையினர் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்லச் வேண்டும் எனவும் குற்றவாளிகள் தாக்கும் போது துப்பாக்கியை பயன்படுத்த தயங்கக் கூடாது எனவும் டிஜிபி சைலேந்திர பாபு அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு காவல்துறையில் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளிகளை பிடிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 5 பேரை தமிழக போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போது இரு குற்றவாளிகள் போலீசாரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றதால் உதவி ஆய்வாளர் இருளப்பன் இரண்டு பேரையும் துப்பாக்கியால் காலில் சுட்டு கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி திருச்சியில் ரவுடிகளிடம் நகைகளை மீட்க சென்ற இடத்தில், போலீசாரை ரவுடிகள் அரிவாளால் தாக்கிய போது தற்காப்புக்காக ஆய்வாளர் மோகன் அவர்களை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்தார். அதற்கடுத்தாக கடந்த 22ஆம் தேதி அயனாவரம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரை இரும்பு ராடால் தாக்கிவிட்டு சென்ற வழக்கில் ரவுடி சூர்யாவை போலீசார் கைது செய்து அழைத்து வந்த போது, இரண்டு காவலர்களை அரிவாளால் வெட்டி தப்பிக்க முயன்றார். அப்போது எஸ்.ஐ மீனா தற்காப்புக்காக ரவுடி சூர்யாவை காலில் சுட்டு பிடித்தார்.

அதன் பின்னர் கடந்த 27ஆம் தேதி கொலை வழக்கு குற்றவாளியான வினோத்குமாரை போலீசார் கைது செய்து அவரை அழைத்து சென்ற போது, போலீசாரை அரிவாளால் தாக்கினார். அதனால் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் துப்பாக்கியால் சுட்டு வினோத்குமாரை பிடித்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று கோவையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சஞ்சய் ராஜாவிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்ய போலீசார் அழைத்துச் சென்ற போது, ரவுடி சஞ்சய் ராஜா பெண் போலீஸை நோக்கி சுட முயன்ற போது எஸ்.ஐ சந்திரசேகர் சஞ்சய் ராஜாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதை பலரும் பாராட்டி வரும் நிலையில் மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக காவல்துறையினர் சுட்டு கொலை செய்வதற்கு பதிலாக பிடித்துள்ளார்கள் என்று சொல்வதே நல்லது. ஆனால் அதற்கும் சட்டத்தில் இல்லை. ஏனென்றால் இது போன்று தொடர்ந்து காவல்துறையினர் செய்வதற்கு வாய்ப்பாக அமைய கூடாது என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் கூறியுள்ளார்.

மேலும் ஆயுதங்களை பயன்படுத்தி எந்த ஒரு குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று சட்டத்தில் கூறவில்லை எனவும், மாறாக குற்றவாளிகள் அதிக பலத்துடன் இருக்கும் போது அதற்கு சமமான பலத்துடன் சென்று போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் காவல்துறை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்வது, சுட்டு பிடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் இது கண்டிக்கத்தக்க விஷயம் எனவும் அவர் கூறினார்.

போலீசார் சுட்டு பிடிப்பதால் ரவுடி கெளதம் என்பவர் பயத்தில் வீடியோ வெளியிட்டதோடு, நீதிமன்றத்தில் சரணடைய வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதையும் படிங்க: "லிவ்விங் டு கெதர்" வாழ்க்கை புளித்துப்போனதால் மனம் மாறிய இளைஞர்... பணத்தை இழந்து பரிதவிக்கும் மலேசியப் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.