சென்னை: சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கி, முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "சுகாதாரத்தில் சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் “ முன் மாதிரி கிராம விருது” தோற்றுவிக்கப்பட்ட மாவட்டத்தில் ஒரு கிராம ஊராட்சி என்கின்ற அடிப்படையில் 37 கிராமங்களுக்கு “முன் மாதிரி கிராம விருது” வழங்கி கௌரவிப்பதுடன் இதற்கான கேடயமும் ரூ.7.50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
மேலும், மாவட்ட அளவிலான விருதுகளுடன் சிறப்பாகச் செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் “முன்மாதிரி கிராம விருது” வழங்கியதற்கான கேடயமும் தலா 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்