தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருப்பதால் சமூக இடைவெளி காரணமாக ஒருவருக்கு ஒருவர் விலகி இருப்பதாலும், பல்வேறு வகையான மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் மக்கள் ஆளாவதாகத் தெரியவந்துள்ளது.
இந்நேரத்தில் மக்களுக்கு உதவும் வகையிலும், அவர்களின் மனநலம் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆலோசனைபெற விரும்புவோர் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரையிலும் இந்த ஆலோசனைகளை பெற்று பயன் அடையலாம்.
காலை 10 மணி முதல் 12 மணி வரையில் 87786 19480 என்ற எண்ணிற்கும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையில் 99411 42327 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பார்க்க: வரலாறு காணாத வீழ்ச்சியில் இந்திய ரூபாயின் மதிப்பு!