மகாராஷ்டிராவில் இருந்து வந்த 138 பேர் உள்பட தமிழ்நாட்டில் 817 பேருக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,545ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 550க்கு குறையாமல் உயர்ந்து கொண்டே வருவது மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள கரோனா வைரஸ் குறித்த தகவலில், தமிழ்நாட்டில் 42 அரசு, 28 தனியார் ஆய்வகங்களில் 11,231 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. 817 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வசித்து வந்த 678 பேருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 138 பேருக்கும், கேரளாவிலிருந்து வந்த ஒருவருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 42 ஆயிரத்து 970 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் 8,500 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வீடுகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் 5,771 பேர் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் பலனின்றி 6 பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 74 வயது பெண்மணி, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது பெண்மணி, 54 வயது பெண்மணி, 51 வயது ஆண், 39 வயது ஆண் 79 வயது முதியவர் பல்வேறு நோயின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மாவட்டம் வாரியாக பாதிப்பு:
- சென்னை -12,203
- செங்கல்பட்டு -888
- திருவள்ளூர் -825
- கடலூர் -439
- அரியலூர் -362
- விழுப்புரம் -332
- காஞ்சிபுரம் -330
- திருநெல்வேலி -301
- திருவண்ணாமலை -263
- மதுரை -241
- கள்ளக்குறிச்சி -227
- தூத்துக்குடி -194
- கோயம்புத்தூர் -146
- பெரம்பலூர் -139
- திண்டுக்கல் -134
- விருதுநகர் -116
- திருப்பூர் -112
- தேனி -108
- ராணிப்பேட்டை -96
- தஞ்சாவூர் -85
- தென்காசி -83
- கரூர் -80
- திருச்சிராப்பள்ளி -79
- நாமக்கல் -76
- ஈரோடு -71
- சேலம் -68
- ராமநாதபுரம் -65
- கன்னியாகுமரி -59
- நாகப்பட்டினம் -52
- திருவாரூர் -42
- வேலூர் -40
- திருப்பத்தூர் -32
- சிவகங்கை -31
- கிருஷ்ணகிரி -25
- புதுக்கோட்டை -21
- நீலகிரி -13
- தருமபுரி -8
மேலும் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பிய பயணிகளில் 86 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 67 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு முதலில் எடுக்கப்பட்ட சோதனையில் நோய்த் தொற்று இல்லையென முடிவு வந்தது. ஏழு நாள்கள் கழித்து மீண்டும் எடுக்கப்பட்ட சோதனையில் 45 பயணிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானங்களில் வந்த 70 பேரின் சளி மாதிரிகள், மகாராஷ்டிராவில் இருந்து 25ஆம் தேதி திருநெல்வேலி வந்த 807 நபர்களின் சளி மாதிரிகள் பரிசோதனையில் உள்ளன.