ETV Bharat / state

தமிழ்நாட்டுக்கு 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வேண்டும் - பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதம் வரை 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் முன்வைத்துள்ளார்.

tamilnadu cm edapadi palanisamy request to prime minister modi for state needs

author img

By

Published : Aug 11, 2020, 4:56 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடியுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஆகஸ்ட் 11) ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், “இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் மிகக்குறைவான இறப்பு விகிதம் உள்ளது. அதாவது 1.6 விழுக்காடு. நாட்டிலேயே குணமடைவோரின் விகிதமும் அதிகளவில் 80.8 விழுக்காடாக உள்ளது. மாநிலம் முழுவதும் சிறப்பான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையின் 15 மண்டலங்களுக்கு ஆறு அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

3.77 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 253 சிறப்பு ரயில்கள் மூலம் அவரவர் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான மொத்த செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதுவரை 60,875 பயணிகள் விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவும் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் செய்வதற்கான அனுமதியை நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்கியுள்ளது. மேலும் 50 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடங்கி உள்ளன. விவசாய பணிகள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஆயிரத்து 369 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 841 தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளன. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் மட்ட குழு நிலைமைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது” என முதலமைச்சர் பழனிசாமி எடுத்துரைத்தார்.

இந்த ஆலோசனையின் போது பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்திற்கு தேவையான நிலுவைத் தொகை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:

* தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள 130 ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நாளொன்றுக்கு 5 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இதற்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து (PM cares) 50 விழுக்காடு நிதி ஒதுக்கவேண்டும்.

* உயர்தர வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மாநில அரசுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும். மேலும் 5.25 கோடி முகக் கவசங்கள், 48 லட்சத்துக்கு N95 முகக் கவசங்கள் 43 லட்சம் ஆர்டிபிசியல் பரிசோதனை உபகரணங்கள் வாங்க கோரப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதம் வரை 55 ஆயிரத்து, 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும்.

* அவசரகால மற்றும் மருத்துவ முன்னேற்பாடு தொகுப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 712.64 கோடியில் ரூ. 512.64 கோடி மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டிற்காக மூன்றாயிரம் கோடி ரூபாய் வரை உயர்த்தித் தரவேண்டும்.

* தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களின் மேம்படுத்த ரிசர்வ் வங்கியின் சிறப்பு தொகுப்பு திட்டத்திலிருந்து ஆயிரம் கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும். இதன் காரணமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீட்டெடுக்க உதவும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.