தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி அறிக்கையில், அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்தோம்.
அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆத்மா இறைவனடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.