ETV Bharat / state

வங்கி, ரேஷன் கடை, தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு! - Chennai corporation

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வங்கி, ரேஷன் கடை, தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றிக்கையை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

சென்னை செய்திகள்  சென்னை ஊரடங்கு தளர்வு  chennai news  curfew relaxation rules in chennai  Chennai corporation  சென்னை மாநகராட்சி
சென்னை:ரேஷன் கடை, தொழிற்சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
author img

By

Published : Jul 14, 2020, 12:56 PM IST

சென்னை ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில்கள் விதிமுறைகளுடன் தொடங்கவுள்ள நிலையில், தலைமை நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் மூன்று நாள்கள் (ஜூலை 9 - ஜூலை 11) ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், வங்கிகள், ரேஷன் கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த சுற்றறிக்கையை அனைத்து அலுவலகங்களுக்கும் ஆணையர் பிரகாஷ் அனுப்பியுள்ளார்.

வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

• வங்கிகளுக்கு வரும் மக்கள் தகுந்த இடைவெளியுடன் நிற்பதற்கு தரையில் வட்டம் அல்லது சதுர வடிவில் குறிப்பிட்டு, இடைவெளியுடன் நிற்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
• வங்கிகளுக்கு பணம் எடுக்க வரும் நபர்களுக்கு டோக்கன் கொடுத்து, அதன்படி வங்கிகளுக்கு வரவழைக்க வேண்டும்.
• ஒரு வங்கியில் ஐந்து நபருக்கு மேல் உள்ளே அனுமதிக்கக் கூடாது.
• சிறுதொகை எடுப்பது, வங்கி புத்தகத்தை அப்டேட் செய்வது போன்ற சிறு காரியங்களுக்கு ஆன்லைன் மூலம் முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்.
• சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளின் ஏடிஎம்களிலும் பணத்தை நிரப்பிவைக்க வேண்டும்.
• வங்கிகளில் பணிபுரியும் அலுவலர்கள் முகவசம், கையுறை ஆகியவற்றைக் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
• விதிமுறைகளை மீறும் வங்கியின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ரேஷன் கடைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

• கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு 2,000 குடும்ப அட்டைக்கு மேல் இருக்கும் ரேஷன் கடைகளை இரண்டாகப் பிரித்து இயக்க வேண்டும்.
• ரேஷன் பொருள்களை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரங்களில் மட்டுமே வழங்க வேண்டும்.
• ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் கையுறை, முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
• ரேஷன் பொருள்களை வாங்கவரும் நபர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
• அனைத்து ரேஷன் கடைகளின் வெளியிலும் முகக்கவசம் அணியவில்லை என்றால் பொருள்கள் இல்லை என பலகை வைத்திருக்க வேண்டும்.
• ரேஷன் கடைகளில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் கபசுரக் குடிநீர், மாத்திரைகள் போன்றவை தவறாமல் அளிக்க வேண்டும்.
• மாநகராட்சியால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் மூலம் தினசரி ரேஷன் கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
• மாநகராட்சி சிறப்புக் குழு ஆய்வின்போது, விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிற்சாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

• அனைத்து தொழிற்சாலை பகுதிகளிலும் தகுந்த இடைவெளியுடன் பணிபுரிய இருக்கிறார்களா என உறுதிசெய்ய வேண்டும்.
• உடனடியாக தொழில்துறை சங்கங்கள் கூட்டத்தைக் கூட்டி கரோனா பரவலைத் தடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளை அக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
• உடனடியாக ரியல் எஸ்டேட், கட்டடத் தொழில் சங்கங்களில் கூட்டத்தைக் கூட்டி கரோனா பரவலைத் தடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துரைக்க வேண்டும்.
• அனைத்து அலுவலர்களுக்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், ஜிங்க் மாத்திரைகள் போன்றவை தொடர்ந்து வழங்க வேண்டும்.
• மாநகராட்சியால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும். ஆய்வின்போது, விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதையும் படிங்க: இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தேசிய தலைவர் சுதாகர் ரெட்டி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.