பாஜக மாநில தலைவர் எல். முருகன் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வருகின்ற 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் மரம் நடும் நிகழ்ச்சி, அன்னதானம், கொடியேற்றும் நிகழ்வுகள் நடத்தப்படும். வாரம் முழுவதும் சேவை வாரமாக கொண்டாடப்படும்.
20 லட்சம் நபர்கள் கலந்துகொள்ளும் மெய்நிகர் பேரணி நடத்தப்படும். நீட் விவகாரத்தில் மாணவர்களை திமுக பயமுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்யக்கூடாது. மன்மோகன் சிங் அமைச்சரவையில் திமுக இருந்தபோது இந்த விவகாரம் தொடர்பாக பேசவில்லை. 2ஜி விவகாரத்தில் இருந்து தப்ப முயற்சி செய்துகொண்டிருந்தது. மாணவர்களை தூண்டிவிடுவதை திமுக நிறுத்தவேண்டும்" என்றார்.
நீட் விவகாரம் குறித்து நடிகர் சூர்யா கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், நீட் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றார்.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பை தெரிவிக்க தமிழ்நாடு அரசிற்கு திராணியில்லை’- காங்கிரஸ்