சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக் 18) 2ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியும் வாக்குவாதம் செய்தும் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
அதன்பிந் ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களை அவையில் இருந்து நீக்கம் செய்வதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதோடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஈபிஎஸ் தரப்பு அமளி தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ‘சட்டப்பேரவை விதிப்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு அங்கீகாரம் கிடையாது. எதிர்கட்சி தலைவர் பதவிக்கு மட்டுமே அங்கீகாரம் உண்டு. அதேபோல் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டிய தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு ஈபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் தர்ணா