சென்னை கோயம்பேட்டில் தென் சென்னை மக்களவை தொகுதி மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமனியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கராத்தே தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாக்கியம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், நாடாளுமன்றத்தில் நான் ஒலிக்கும் முதல் குரலில் தென் சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன். போராட்டக் களத்தில் குடும்பம் குடும்பமாகதான் கலந்துகொண்டோம். அப்போது வாரிசு உள்ளதே என்று யாரும் கேட்கவில்லை. தற்போது மட்டும் வாரிசு அரசியல் என ஏன் கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.