ETV Bharat / state

வாணி ஜெயராம் இறப்புக்கு காரணம் என்ன.? வெளியானது உடற்கூராய்வு அறிக்கை! - சென்னை செய்திகள்

வாணி ஜெயராமின் முதற்கட்ட உடற்கூராய்வு முடிவில் பழமையான மேசை மீது விழுந்து தலையில் பலமாக அடிபட்டதில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

வாணி ஜெயராம்
வாணி ஜெயராம்
author img

By

Published : Feb 5, 2023, 2:15 PM IST

சென்னை: புகழ் பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) நேற்று (பிப். 4) காலை நுங்கம்பாக்கத்தில் ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் பெற்ற ஆயிரம் விளக்கு போலீசார், உடனடியாக அவரது இல்லத்திற்குச் சென்றனர்.

நெற்றியில் காயத்துடன் உயிரிழந்து கிடந்த வாணி ஜெயராம் உடல் மீட்கப்பட்ட நிலையில், சந்தேக வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரது உடலை உடற்கூராய்வுகாக ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு தொடர்பாக்ல தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பாடகி வாணி ஜெயராமின் உடற் கூராய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் வாணி ஜெயராமின் படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை மீது விழுந்து தலையில் பலமாக அடிபட்டதில்தான் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேசையின் விளிம்பில் உள்ள ரத்த கறைகளை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்திருப்பதாகவும் தடயவியல் துறை அறிக்கை மற்றும் உடற்கூராய்வு அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Vani Jairam: 'காற்றில் கலந்த கான சரஸ்வதி' வாணி ஜெயராம் குறித்த முழு விபரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.