ETV Bharat / state

குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் 10 ஆயிரம் சதுரஅடி வரையிலான குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கும் வகையில் அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

tamilnadu govt
tamilnadu govt
author img

By

Published : Oct 15, 2020, 2:52 AM IST

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் கடந்தாண்டு அமல்படுத்தப்பட்டன. அதன்படி, சென்னை தவிர மற்ற பகுதிகளில், 7 ஆயிரம் சதுர அடி வரையிலான மொத்த கட்டட பரப்பு கொண்ட கட்டடங்கள், 8 வீடுகள் கொண்ட அதேநேரம் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத கட்டடங்கள், முழுவதுமாக பார்க்கிங் உள்ள ஸ்டில்ட் தளம் உள்பட 4 தளங்கள் அல்லது தரைதளம் உள்பட 3 தளங்கள் கொண்ட கட்டடங்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே கட்டட திட்ட அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட இதர உள்ளாட்சி அமைப்புகளில் 300 சதுரமீட்டர் பரப்பு மற்றும் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத வணிக வளாக கட்டடங்கள், 2 ஆயிரம் சதுர அடி பரப்பு மற்றும் ஸ்டில்ட் தளம் உள்பட 3 தளங்கள் அல்லது தரைதளம் உள்பட 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டட திட்ட அனுமதிகளையும் அந்த உள்ளாட்சிகளே வழங்கலாம் என சட்ட விதிகளில் கூறப்பட்டது.

இவை தவிர, இதர வகை கட்டடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல்லது நகர மற்றும் ஊரமைப்பு திட்டத் துறையில் அனுமதி பெற வேண்டும்.

இந்த நிலையில், கட்டடங்களுக்கான அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், அனுமதி வழங்குவதற்கான வரையறையை மாற்ற வேண்டும் என்றும் இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் ( CREDAI) சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. இது குறித்து அரசுக்கு நகர ஊரமைப்பு திட்டத்துறை பரிந்துரை அளித்தது.

அதில், குடியிருப்பு கட்டடத்தின் மொத்த கட்டுமானப் பரப்பு 10 ஆயிரம் சதுரஅடி மற்றும் 8 குடியிருப்பு அலகுகள், அதே நேரம் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத வகையில் ஸ்டில்ட் உள்பட 4 தளங்கள் அல்லது தரைதளம் உள்பட 3 தளங்கள் கொண்ட கட்டடம் வரை உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம் என்றும், வணிக வளாக கட்டடங்களை பொறுத்தவரை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கே அனுமதி வழங்கலாம் என்றும் பரிந்துரைத்தது. அதனை ஏற்று, சென்னை தவிர மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.