ETV Bharat / state

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனம் - நாளை முதல் மாணவர் சேர்க்கை

author img

By

Published : Aug 11, 2021, 5:42 PM IST

Updated : Aug 11, 2021, 5:54 PM IST

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் நாளை(ஆக.12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

film
film

சென்னை: தமிழ்நாடு அரசு எம் ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித்துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும்.

4 ஆண்டு பட்டப்படிப்பு

இந்நிறுவனம் 2016 -2017ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று, கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டு, இந்தியாவிலேயே முதன் முறையாகத் திரைப்படத் தொழில்நுட்பங்களுக்கென இளங்கலை காட்சிக்கலை ( Bachelor of Visual Arts ) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளைப் பயிற்றுவித்து வருகிறது.

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து இன்று(ஆக.11) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறியிருப்பதாவது. " 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. இளங்கலை - காட்சிக்கலை (ஒளிப்பதிவு) - Bachelor of Visual Arts (Cinematography)
  2. இளங்கலை - காட்சிக்கலை (எண்மிய இடைநிலை) - (Digital Intermediate)
  3. இளங்கலை - காட்சிக்கலை (ஒலிப்பதிவு) - (Audiography)
  4. இளங்கலை - காட்சிக்கலை (இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்) - (Direction and Screenplay writing)
  5. இளங்கலை - காட்சிக்கவை (படத்தொகுப்பு) -Film Editing)
  6. இளங்கலை - காட்சிக்கலை (உயிர்ப்புட்டல் மற்றும் காட்சிப்பயன்) - (Animation and Visual Effects)

எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கான விண்ணப்பங்களை நாளை ஆகஸ்ட் 12 முதல் செம்டம்பர் 9 ஆம் தேதி வரை தபால் மூலமாகவோ அல்லது தமிழ்நாடு அரசின் www.tn.gov.in எனும் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் முதல்வர்(பொ), தமிழ்நாடு அரசு எம்.ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி வளாகம், தரமணி , சென்னை - 600 113 என்ற முகவரிக்கு மேற்குறிப்பிட்ட தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

செம்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற நேரடியாக வரவேண்டாம்" எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளிகளைத் திறக்க தயாராகி வருகிறோம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

Last Updated : Aug 11, 2021, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.