ETV Bharat / state

பாத்திமா பீவி மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்! - முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மறைவு

CM MK Stalin Condolence to Former Governor Fathima Beevi : தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 3:56 PM IST

சென்னை : நாட்டின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியான பாத்திமா பீவி (வயது 96), கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் இன்று காலமானார். பாத்திமா பீவி 1927ஆம் ஆண்டு கேரளாவின் பத்தனம்திட்டாவில் பிறந்தார். இவர், திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1950ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வழக்கறிஞராக தனது பணியைத் துவங்கினார்.

1950ஆம் ஆண்டு நீதித்துறையில் தனது பயணத்தை துவங்கிய பாத்திமா பீவி விரைவிலேயே நீதித்துறையில் முன்சிஃப் ஆக உயர்ந்தார். பின்னர் மாஜிஸ்திரேட்டாக, மாவட்ட அமர்வு நீதிபதியாக, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராகவும் உயர்ந்தார். பின்னர் 1983ஆம் ஆண்டு பாத்திமா பீவி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1989ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

மேலும், நீதித்துறையின் இவ்வளவு உயர் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமிய பெண் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பாத்திமா பீவி தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 1997 முதல் 2001 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.

மேலும் இவர் தமிழக ஆளுநராக இருந்த காலத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார். 1990இல் டி.லிட் மற்றும் மகிளா சிரோமணி விருது, பாரத் ஜோதி விருது மற்றும் யு.எஸ்-இந்திய பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) வாழ்நாள் சாதனையாளர் விருது என பல்வேறு கௌரவ பட்டங்களையும் பெற்றுள்ளார்.

முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி, மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன். உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவியின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்

  • தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/Ym5p0MCFmP

    — TN DIPR (@TNDIPRNEWS) November 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க : தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.