ETV Bharat / state

'உடல் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி!' - ஏர்போர்ட்டில் எமோஷனலான டி.ஆர்!

உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட டி.ராஜேந்தர், உடல் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என கண்களில் நீர் ததும்ப பேட்டியளித்துள்ளார்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்
author img

By

Published : Jun 14, 2022, 8:51 PM IST

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் உயர் சிகிச்சைக்காக இன்றைய தினம் அமெரிக்கா புறப்பட்டுச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், 'என் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் எனது உடல் நலம் பற்றி நல்லபடியாக செய்தி போட்ட ஊடகத்தினருக்கு முதல் நன்றி. இன்று செய்தியாளர்களைச் சந்திக்கும் எண்ணம் எனக்கில்லை. எனது பிஆர்ஓ சொன்னதன் காரணமாக இன்று நான் உங்களை சந்தித்துச் செல்கிறேன்.

நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. என் முகத்தில் தான் தாடி வைத்து இருக்கிறேன். என் வாழ்க்கையில் எதையும் மூடி வைத்தது இல்லை. நான் இன்றுதான் அமெரிக்கா செல்கிறேன். அதற்கு முன்னதாகவே பல கதைகளை அடைத்து நான் அமெரிக்கா சென்றுவிட்டதாக குறிப்பிட்டார்கள். நானே ஒரு நடிகன், இயக்குநர். எனக்கே கதை எழுதி திரையிட முயற்சிக்கின்றனர்.

விதியை மீறி எதுவும் நடக்காது. எனக்காக பிரார்த்தனை செய்த கட்சிக்காரர்கள், என் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள் என்னுடைய விசுவாசிகளாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை சரியில்லாதபோது நேரில் வந்து என்னை சந்தித்த முதலமைச்சர், ஜி.கே. வாசன், பச்சைமுத்து, கமல்ஹாசன், ஐசரி கணேசன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி. ராமச்சந்திரா மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களும் என் மீது காட்டிய அன்பிற்கு அளவே இல்லை. அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றையும் விட என் தாய் கழகம் திமுக தலைவர் தற்போதைய முதலமைச்சர் அன்பைக்காட்டி, பாசம் காட்டி, தோள் தட்டி என்னை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் இரண்டாவது முறையாகவும் குடும்பத்தினரோடு வந்து என்னை நேரில் சந்தித்து அன்பையும் ஆதரவையும் காட்டியபோது எனக்குத் தோன்றியது என் மீது அன்பு காட்டுவார் என்று கலைஞரை மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால், இப்போது அவரது மகன் ஸ்டாலின் காட்டியதும் அவர் மீது இன்னும் மதிப்பு எனக்கு அதிகமாகியிருக்கிறது.

உலகத்தில் வாழக்கூடிய அனைத்து ஈழத்தமிழ் மக்கள் இருக்கும் வரையிலும் என்னைப்பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நான் இன்று வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம், எனது மகன் சிலம்பரசன் தான். அவன் கேட்டுக்கொண்டதன்பேரில் தான் நான் ஒப்புக்கொண்டேன். அவனது படப்பிடிப்புகளை ரத்துசெய்து விட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான்.

'உடல் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி!' - ஏர்போர்ட்டில் எமோஷனலான டி.ஆர்!

பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷியனை உருவாக்கியதற்கும் நான் பெருமைப்படுகிறேன்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கும் டி.ராஜேந்தருடன் கமல் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.