சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது மாடி பிரசவ வார்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
சிகிச்சைப் பெற்று வரக்கூடிய 36 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு திருவல்லிக்கேணி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், துறைமுகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தனது தொகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு உதயநிதி வேண்டுகோள்!