ETV Bharat / state

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது! - tamilnadu govt

சென்னை: பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும், மாணவர்களை பள்ளிக்கு வருவதற்கு கட்டாயப்படுத்த கூடாது எனவும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வருவதை கட்டாயப்படுத்தக்கூடாது

author img

By

Published : Jan 13, 2021, 8:24 PM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது, "அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக பள்ளிகள் திறப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான பாடங்களை முடிக்கும் வகையில் வாரத்தில் 6 நாட்களும் வகுப்புகள் நடத்த அறிவுரை வழங்கப்படுகிறது.

ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அமர வைக்க வேண்டும். வகுப்பறையில் தகுந்த இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஒரு வகுப்பில் 25 மாணவர்களுக்கு அதிகமாக இருந்தால் இரண்டு பிரிவாக பிரித்து வகுப்புகள் நடத்த வேண்டும்.

மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது:

மாணவர்கள் நேரடி வகுப்பில் கற்பதை விட ஆன்லைனில் வகுப்பில் கலந்துக் கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தனியார் பள்ளி நிர்வாகங்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பின்னரே திறக்க வேண்டும். பெற்றோர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதியைப் பெற்றே மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டும். பெற்றோர்களின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிப்பதுடன் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

முகக்கவசம் கட்டாயம்:

பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆசிரியர்கள் மாணவர்கள் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் சுகாதாரத் துறையால் வழங்கப்படும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உடல் வெப்ப பரிசோதனை:

பள்ளிகளில் உடல் வெப்ப பரிசோதனை கொண்டு பரிசோதிக்க வேண்டும். கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுதும் பள்ளியை விட்டுச் செல்லும் பொழுதும் 6 அடி தகுந்த இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இறை வணக்க கூட்டம் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை:

கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறை வணக்க கூட்டம் விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிகளில் நீச்சல் குளங்கள் இருந்தால் மறு உத்தரவு வரும்வரை மூடப்பட வேண்டும். பள்ளிகளில் உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கான பாடவேளைகள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடையாது.

அனுமதி கிடையாது:

கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி கிடையாது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

தண்ணீர் பாட்டில் கொடுக்க தடை:

பள்ளிகளில் மாணவர்கள் பாடப்புத்தகம் நோட்டுகள் பேனா, பென்சில் உணவு தண்ணீர் பாட்டில் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாது. மாணவர்களுக்கு இடையே உணவு பகிர்ந்து கொள்ள அனுமதிக்கக்கூடாது. பள்ளியில் சத்துணவு சாப்பிடாத மாணவர்கள் வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டுவந்து சாப்பிடுவதை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் உடல் நலனை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அருகில் மருத்துவர் அல்லது சுகாதார பணியாளர் இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்" உள்ளிட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.