ETV Bharat / state

'கனெக்ட்' படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடத் தடை! - Chennai District cinema News

நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள 'கனெக்ட்' (connect) திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'கனெக்ட்' படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை: நீதிமன்றம்

author img

By

Published : Dec 23, 2022, 10:15 PM IST

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் "கனெக்ட்" (connect) என்கிற திரைப்படம் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாக்கப்பட்டு, அஸ்வின் சரவணன் இதனை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை 2634 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்கக்கோரி, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2634 இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க, 29 இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, பட நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, "நேற்று (டிச. 22) திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரைத்துறையினரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் சட்டவிரோத வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, கனெக்ட் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்னது வாடிவாசலும் ட்ராப்பா? என்ன செய்கிறார் சூர்யா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.