ETV Bharat / state

'சிலை கடத்தல்... உங்கள் ஈகோதான் காரணம்'  - ஐ. பெரியசாமி பாய்ச்சல்! - சட்டப்பேரவை

சென்னை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு, போதிய வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தரவில்லை என்று திமுக உறுப்பினர் ஐ. பெரியசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

officers
author img

By

Published : Jul 19, 2019, 2:59 PM IST

சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ஐ. பெரியசாமி பேசுகையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிற்கு போதிய வசதிகளை இந்த அரசு செய்து தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அரிய பொக்கிஷமான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, தற்போது அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஐ. பெரியசாமி, அதனை தருவதற்கு தயார் என அந்நாடு அறிவித்தும், சிலையை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்தார்.

மேலும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேலுக்கு, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததை சுட்டிக்காட்டிய அவர், அங்கும் அதே உத்தரவு வந்த பிறகும் எந்த ஒரு வசதிகளும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

சிலைகள் என்பது விலை மதிப்பில்லாதது எனவும், தமிழர்களின் வரலாறு அடங்கியது எனவும் தெரிவித்த ஐ. பெரியசாமி, 'இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பிரிவிற்கு போதிய வசதி செய்து தராததற்கு காரணம், உங்களது, ‛ஈகோ’தான்' என்று ஆவேசமாகக் பேசினார்.

நம்மை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாரே என்ற காரணத்திற்காக, பொன். மாணிக்கவேலுக்கு எந்த வசதியையும் செய்துதரவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலரான பொன்.மாணிக்கவேல், சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுவதற்கு முன்பே, அதேப் பிரிவில் பணியாற்றிவந்தார்.

அவரது பணிக்காலத்தில் 31 வழக்குகள் மட்டுமே பதியப்பட்டன; அதில் ஏழு வழக்குகளில்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, பல்வேறு நிலைகளில், 204 காவல் துறை அலுவலர்கள், காவலர்கள் அந்தப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

600 விழுக்காடு அளவிற்கு காவல் துறை அலுவலர்கள், காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவுக்காக ரூ.22 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்தார்.

Intro:Body:
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, போதிய வசதிகளை தமிழக அரசு செய்து தரவில்லை என, சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டி பேசியதற்கு, அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி பேசினார். அவர் பேசும்போது, சிலை கடத்தல் பிரிவிற்கு போதிய வசதிகளை, இந்த அரசு செய்து தரவில்லை. அரிய பொக்கிஷமான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டு, தற்போது அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருக்கிறது. அதனை தருவதற்கு தயார் என அந்நாடு அறிவித்தும், சிலையை மீட்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐ.பெரியசாமி குற்றம் சாட்டினார்.
மேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியான பொன் மாணிக்கவேலுவிற்கு, தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, நீங்கள் உச்சநீமதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தீர்கள். அங்கும், அதே உத்தரவு வந்தபிறகும், எந்த ஒரு வசதிகளும் செய்யவில்லை என, ஐ.பெரியசாமி குற்றம் சாட்டினார்.
சிலைகள் என்பது விலை மதிப்பில்லாதது எனவும், தமிழர்களின் வரலாறு அடங்கியது எனவும் தெரிவித்த ஐ.பெரியசாமி, இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பிரிவிற்கு போதிய வசதி செய்து தராததற்கு காரணம், உங்களது, ‛ஈகோ’ தான் என்றும் குற்றம்சாட்டிய ஐ.பெரியசாமி, நம்மை எதிர்த்து வழக்கு தொடர்ந்தாரே என்ற காரணத்திற்காக, எந்த வசதியையும் செய்துதரவில்லை எனவும் தெரிவித்தார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விரிவான பதிலை அளித்தார். அவர் பேசும்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பே, அதே பிரிவில் பணியாற்றி வந்ததாகவும், அவரது பணிக்காலத்தில் 31 வழக்குகள்மட்டுமே பதியப்பட்டன எனவும், அதில் 7 வழக்குகளில் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார் எனவும் தெரிவித்த முதல்வர், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, பல்வேறு நிலைகளில், 204 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அந்த பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
600 விழுக்காடு அளவிற்கு காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், அந்த பிரிவுக்காக 22 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.