ETV Bharat / state

70 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை மாற்றிய ஸ்டாலின்

சென்னை: ஆளுங்கட்சியான அதிமுகவை விட அதிக இடங்களைக் கைப்பற்றி, 70 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இல்லாத அளவு ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றிவாகை சூடியுள்ளது.

Stalin
Stalin
author img

By

Published : Jan 3, 2020, 10:07 PM IST

Updated : Jan 3, 2020, 10:23 PM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இ. கம்யூனிஸ்ட், மா. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்று தேர்தலை சந்தித்தன.

O Pannerselvam - Edappadi Palanisamy
O Pannerselvam - Edappadi Palanisamy

மொத்தமாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியதன் விளைவாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்கள், அதன் தாய் மாவட்டங்கள் நீங்கலாக 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் இன்னும் முழுவதுமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஆளுங்கட்சியான அதிமுகவை விட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போட்டியிட்ட திமுகவினர் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

MK Stalin
MK Stalin

1986ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலை எதிர்க்கட்சி வரிசையில் இருந்து திமுக சந்தித்தது. அப்போது, பெரும்பாலான நகரப் பகுதிகளைக் கைப்பற்றி வெற்றிக்கு அருகில் வந்தது திமுக. ஆனால், அதிமுகவை தோற்கடிக்க முடியவில்லை. இதற்கு எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கும், அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னமும்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த முறை அதிமுகவின் பழைய செல்வாக்கு, ‘சின்னம் சென்டிமென்ட்’ உள்ளிட்டவற்றையெல்லாம் தகர்த்தெறியும் விதமான வெற்றியைப் பெற்றுள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக.

MK Stalin
MK Stalin

2019 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து திமுகவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்த நிலையில், மக்கள் மனநிலை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக யூகிக்கப்பட்டது. அதற்கேற்றார்போல் அதிமுகவும் கையோடு கையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க முனைப்பு காட்டியது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பது வீண், மாநில அரசு ஆதரவின்றி நலத்திட்டங்கள் நடைபெறாது உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கடந்து அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடித்து திமுகவை வெற்றி பெறச் செய்துள்ளனர் தமிழ்நாட்டு மக்கள்.

TTV Dinakaran
TTV Dinakaran

அதேபோல், தனித்து களம் கண்ட டிடிவி தினகரனின் அமமுகவும் கணிசமான அளவு இடங்களைக் கைப்பற்றி கவனத்தை ஈர்த்துள்ளது. மாநிலம் முழுவதும் பொது சின்னம் இல்லாமல் போட்டியிட்டு 95 ஒன்றிய வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது அமமுக. கரூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்கள் அனைத்திலும் அமமுகவுக்கு பிரதிநிதிகள் தேர்வாகியுள்ளனர்.

இந்தத் தேர்தலில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பெரும்பாலும் பரப்புரைகளை மேற்கொள்ளவில்லை என்றாலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டனர். ஸ்டாலின் செல்லும் இடங்களிலெல்லாம் அதிமுக ஆதரவளிக்காமல் இருந்தால் இச்சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என்று கூறிவந்தார். இது மாநிலம் முழுவதும் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அமைந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்ததும்தான் அதிமுகவின் இத்தோல்விக்கு காரணம் என்கிறார் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா.

Edappadi Palanisamy
Edappadi Palanisamy

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் அதிமுக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், தருமபுரி, கடலூர், அரியலூர் போன்ற வட மாவட்டங்களிலும் பாமக உதவியுடன் கரை சேர்ந்துள்ளது அதிமுக. விருதுநகர், தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களிலும் கணிசமான வெற்றியை அதிமுக பெற்றுள்ளது.

இது ஒருபுறமிருக்க, திமுக வெற்றியே பெறாத இடங்களிலெல்லாம் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக ஊரகப் பகுதிகளில் இன்னமும் இருப்பதாக நம்பப்பட்ட ‘இரட்டை இலை’ செல்வாக்கைத் தகர்த்து, 70 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மைல்கல் வெற்றியைப் பெற்றுள்ளது ‘ஸ்டாலின்’ தலைமையிலான திமுக.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி!

Intro:Body:

Stalin dispels ‘Two Leaves’ magic in rural TN, breaks seven decade trend in civic polls

N Ravikumar

Chennai: Breaking a seven-decade trend in Tamil Nadu politics, the DMK headed by MK Stalin became the first opposition in the state to surpass the ruling party in a rural local body polls. The civic elections were held in the last week of December amidst the anti-CAA protests sweeping the hot bed of Dravidian politics. The DMK had managed to break the ‘Two Leaves’ magic in rural Tamil Nadu in the local body polls, billed as the precursor to the next Assembly elections.

Though the final numbers are yet to be formally announced by the State Election Commission, it is clear that the DMK has more number of district and union panchayat wards in its bag than the ruling AIADMK. The last time when the DMK, when it was in opposition, came near to a victory in the local body elections was in 1986 when it garnered most of the urban local bodies. However, the charisma of AIADMK founder MGR and his ‘Two Leaves’ magic, stemmed the tide in the rural parts of the state. This is the second major victory for Stalin-led DMK which swept 38 out of the 39 seats in Tamil Nadu in the 2019 Parliament elections when an anti-BJP wave swept the state.

The victory coming after the loss in bye-elections for two seats, Vikravandi and Nanguneri, set off celebrations in the DMK camp as the trend of voters always supporting the ruling party in civic body polls was broken. Usually, the voters are wary of electing the opposition nominees for the local bodies since they will not be able to improve the amenities or solve the problems in the locality without the state government’s support. This time people’s resentment against the ruling AIADMK-BJP alliance had overcome their fear of having an opposition party member to govern their civic body.

Amma Makkal Munnetra Kazhagam leader TTV Dhinakaran, who contested alone without a common symbol, managed to establish his party in almost all parts of the state, winning a total of 95 panchayat union wards, showing that he cannot be written off in Tamil Nadu politics. His party has representation in almost all the districts of the state now, barring Karur and Kanyakumari. DMK allies Congress, CPI , CPM and MDMK too picked up seats across the state.

Though, Stalin and other opposition leaders did not campaign for the local body polls, they were involved in a rigorous campaign against the CAA just before the elections. Stalin never missed an opportunity to point out that the bill would have been thrown out of Rajya Sabha if the AIADMK voted against it. Soon after the results, former AIADMK MP Anwar Raja attributed the AIADMK’s defeat to the anger of minorities against the AIADMK due to the party’s alliance with the BJP and its support to CAA.

The silver lining for Chief Minister Edappadi K Palaniswami and his senior associates who hail from the Kongu belt is the party’s good performance in their home ground. The AIADMK did well in the Kongu districts of Coimbatore, Tiruppur, Salem, Erode and Namakkal . The AIADMK’s alliance with the PMK, which has a support base of backward Vanniyar community saved the party from a rout as it was able to perform better than the DMK in Dharmapuri, Cuddalore and Ariyalur. The AIADMK also did well in the southern districts of Virudhunagar and Thoothukudi , while the BJP regained its lost ground in Kanyakumari.

Conclusion:
Last Updated : Jan 3, 2020, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.