ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் நான்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - special trains

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

train
train
author img

By

Published : May 30, 2020, 12:34 AM IST

அதன்படி, கேவையிலிருந்து 16 பெட்டிகளுடன், காலை 7.10 மணிக்கு புறப்படும் ஜன சதாப்தி சிறப்பு ரயில் (வண்டி எண் 02084), திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக நண்பகல் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது. அங்கிருந்து மீண்டும் நண்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண் 02083) இரவு 9.15 மணிக்கு கோவை ரயில் நிலையம் சென்றடைகிறது.

மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 02636) திண்டுக்கல், திருச்சி, அரியலூர் வழியாக நண்பகல் 12 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது. அங்கிருந்து நண்பகல் 2 மணிக்கு மீண்டும் புறப்பட்டு (வண்டி எண் 02635) இரவு 9.20 மணிக்கு மதுரையை சென்றடைகிறது. இதில் 22 பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில் (வண்டி எண் 02627) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று நண்பகல் 1 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. மீண்டும் (வண்டி எண் 02628), 3 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருச்சி செல்கிறது.

மற்றொரு இன்டர்சிட்டி சிறப்பு ரயில் (வண்டி எண் 02680) காலை 6.15 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழிகயாக காட்பாடி சென்று, இரவு 10.15 மணிக்கு மீண்டும் கோவை திரும்புகிறது (வண்டி எண் 02679). இந்த ரயிலில் 23 பெட்டிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

30ஆம் தேதி மாலை 4 மணி முதல் ரயில் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு நிலையங்கள் செயல்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அங்கு ரயில்களுக்கான முன்பதிவு மட்டுமே நடைபெறும் என்றும், ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களுக்கான கட்டத்தை திரும்ப பெற தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதற்காக பயணிகள் ரயில் நிலையம் வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை கரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சிறப்பு ரயில்களை இயக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில்வே நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். அதனப்படையில் தமிழத்திற்குள் நான்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மற்ற மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.