ETV Bharat / state

கார்த்திகை மாதம் நாளை பிறப்பு.. சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்! - tamil news

Ayyappan temples in Chennai: நாளை (நவ.16) முதல் கார்த்திகை மாதம் தொடங்குவதை முன்னிட்டு, பக்தர்களுக்கு மண்டல பூஜை மற்றும் மாலை அணிந்து கொள்வதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

special-arrangements-at-ayyappan-temples-in-chennai
சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 1:58 PM IST

சென்னை: ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். இதைத் தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதற்காக நாளை கார்த்திகை-1 (நவ.17) வருவதால், சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கார்த்திகை தினத்தை முன்னிட்டு மண்டல மகரவிளக்கு பூஜை தொடங்குகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள அண்ணாமலைபுரம், மகாலிங்கபுரம், அண்ணா நகர் மற்றும் அம்பத்துரை ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.

குறிப்பாக, மகாலிங்கபுரம் ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் மாலை அணிந்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயிலின் நிர்வாக மேலாளர் அனிஷ்குமார் கூறுகையில், “காலை 5.30 மணியில் இருந்து இருமுடி கட்டிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருமுடி கட்டுவதற்கு முன்பாக உரிய முன்பதிவுகளை கோயிலின் டிக்கெட் கவுண்டரில் செய்து கொள்ள வேண்டும்.

பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளவும், இருமுடி கட்டிக் கொள்ளவும் தேவையான மாலை, வேஷ்டி, துண்டு, துளசி, வெள்ளி மாலைகள் ஆகிய அனைத்தும் கோயில் வளாகத்திலேயே கிடைக்கும். கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், அதிகாலை 4.30 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் மாலை அணிந்து கொள்ளலாம். காலை 5.30 மணியில் இருந்து இருமுடி கட்டிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இருமுடி கட்டுவதற்கு முன்பாக உரிய முன்பதிவுகளை கோயிலின் டிக்கெட் கவுண்டரில் செய்து கொள்ள வேண்டும். பக்தர்கள் மாலை அணிந்து கொள்ளவும், இருமுடி கட்டிக் கொள்ளவும் தேவையான மாலை, வேஷ்டி, துண்டு, துளசி, வெள்ளி மாலைகள் ஆகிய அனைத்தும் கோயில் வளாகத்திலேயே கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கி மகர விளக்கு காலம் வரையிலும் கோயிலில் தினமும் மாலை 6.40 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் கற்பூர ஜோதி ஏந்தி வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு ஐயப்பனின் அருளுடன், வயிறார உண்டு மகிழ அன்னதானத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மண்டல மகர விளக்கு மஹோத்சவத்தை ஒட்டி, ஆண்டுதோறும் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் நடைபெறும் உற்சவத் திருவிழா, இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நடக்கவுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி முதல் மகரவிளக்கு பூஜை நடக்கும் ஜனவரி 15ஆம் தேதி வரையில் மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு முக்கிய வழிபாடான மண்டல பூஜை நடைபெறும். இதற்கும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.