ETV Bharat / state

சுகாதார பணிகள் தொய்வின்றி தொடரும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு - southern railway

சென்னை: சுகாதார பணிகள் மேற்கொள்வதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளதால், ரயில்களில் சுகாதார பணிகள் பாதிப்பின்றி தொடரும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

southern railway
author img

By

Published : Aug 23, 2019, 9:15 PM IST

தெற்கு ரயில்வே துறையால் இயக்கப்படும் ரயில்களை தமிழ்நாட்டு மக்கள் உள்பட பிற மாநில மக்களும் பயன்படுத்துகின்றனர். ரயில்களில் மிக முக்கியமான பணிகளாக இருப்பது சுகாதாரம் தொடர்பான பயோ டாய்லெட்கள் சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடங்கும். இவை அனைத்தும் ரயில்வேயில் தொழில்நுட்ப துறையின் கீழ் வருகிறது.

இவை பெருமளவு ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் நிலையில், அதற்காக வழங்கப்படும் தொகையை தெற்கு ரயில்வே நிர்வாகம் முறையாக வழங்காமல் தாமதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த தொகைகளை பெற ரயில்வே நிர்வாகத்திற்கு தென்னக இரயில்வே பொதுமேலாளர் கடிதம் எழுதியுள்ளார் என்றும், தேவையான தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்காததால் இப்பணிகள் கைவிடப்படுகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பேசிய தென்னக இரயில்வே நிர்வாக அலுவர்கள், தற்போது சுகாதாரப் பணிகள் ரயில்களில் மேற்கொள்வதற்கான தொகை ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலுவையில் இருந்த தொகையும் வழங்கப்பட்டு விட்டதால் பயோ டாய்லெட் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

Intro:

Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 23.08.19

சுகாதார பணிகள் மேற்கொள்வதற்கான நிதி வழங்கப்பட்டுவிட்டதால், ரயில்களில் சுகாதார பணிகள் பாதிப்பின்றி தொடரும் தென்னக ரயில்வே!!

தெற்கு ரயில்வே துறையால் இயக்கப்படும் ரயில்களை தமிழக மக்கள் உள்பட அருகாமை மாநில மக்களும் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். ரயில்களில் மிக முக்கியமான பணிகள் என்று கருதப்படும் பணிகளான சுகாதாரம் தொடர்பான பயோ டாய்லெட்கள் சுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடங்கும். இப்பணிகள் அனைத்தும் ரயில்வேயில் தொழில்நுட்ப துறையின் கீழ் வருகிறது. இப்பணிகள் பெருமளவு ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் நிலையில் அதற்காக வழங்கப்படும் தொகையை தெற்கு ரயில்வே நிர்வாகம் முறையாக வழங்காமல் தாமதித்துவருகிறது என்கிற குற்றச்சாட்டு இருந்த நிலையில், இந்த தொகைகளை பெற ரயில்வே நிர்வாகத்திற்கு தென்னக இரயில்வே பொதுமேலாளர் கடிதம் எழுதியுள்ளதாகவும், ஆயினும் தேவையான தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்காததால் இப்பணிகள் கைவிடப்படவும் உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில்,

இன்று இ.டி.வி பாரத்திடம் இது தொடர்பாக பேசிய தென்னக இரயில்வே நிர்வாக அதிகாரிகள் தற்போது சுகாதாரப் பணிகள் ரயில்களில் மேற்கொள்ளுவதற்கான தொகை ரயில்வே நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே நிழுவையில் இருந்த தொகையும் வழங்க்ப்பட்டு விட்டதால் பயோ டாய்லெட் சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொய்வின்றி வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவித்தனர்.. ஆனால், இது தொடர்பாக அவர்கள் பேட்டியளிக்க மறுத்தனர். மேலும், இப்பிரச்சினை தற்போது எந்த அளவில் உள்ளது என்பது குறித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்க நிர்வாகிகளும் பேச மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

tn_che_03_southern_railway_special_story_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.