சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு, சென்னை மாவட்ட அரசிதழ் எண். 5-ன் படி, கடந்த 20ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணையின் மென்நகல் மற்றும் வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏரியா சபைகள் அடங்கிய வரைபடத்தின் மென்நகல் ஆகியவை பொதுமக்களின் தகவலுக்காகவும், பார்வையிடும் பொருட்டும், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில், http://chennaicorporation.gov.in/gcc/area_sabha என்ற இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று தங்களது எந்த ஏரியா சபையில் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆனால், இதைப் பற்றி விவரம் அறிந்தவர்கள் மட்டுமே இணையதளத்தில் சென்று பார்ப்பார்கள் மற்றவர்களுக்கு எப்படி சென்று சேரும் என்று வாய்ஸ் ஆப் பீப்புள் (Voice of People) என்ற அமைப்பின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மாநகராட்சி இதைப்பற்றி மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், அதுமட்டுமில்லாமல் சில பகுதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
மேயர் அனைத்து பகுதிகளையும் சேர்ப்பதாக தெரிவித்திருக்கிறார், இருந்தாலும் அதனை சேர்த்த பிறகு, ஏரியா சபை குறித்து மக்களிடையே கொண்டு செல்ல என்ன மாதிரியான திட்டம் மாநகராட்சி வைத்திருக்கிறது என்ற கேள்வியையும் இவ்வமைப்பு எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: வரும் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடக்கம் - சபாநாயகர்