ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் அறையில் செல்ஃபோன்கள் இருந்ததாகக் கூறி சமீபத்தில் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முருகன் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்துவருகிறார்.
இந்நிலையில், முருகனை தனிமை சிறையிலிருந்து விடுவிக்கக்கோரியும் அவரை அவருடைய மனைவி நளினி மற்றும் உறவினர்களைச் சந்திக்க அனுமதிக்கக் கோரியும் முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ராமன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.