ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 140 பாதுகாப்பு பரிசோதனை கவுண்டர்கள்

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 64 கவுண்டா்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் 140 கவுண்டா்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் 140 பாதுகாப்பு பரிசோதனை கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது

author img

By

Published : Sep 30, 2022, 10:46 AM IST

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் விமான சேவைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் விமான சேவைகளுக்கு தகுந்தாற்போல் சென்னை விமானநிலையத்தை விரிவுப்படுத்தும் பணியை இந்திய விமானநிலைய ஆணையம் தொடங்கி நடத்தி வருகிறது.

2,400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 2.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் இந்த ஒருங்கிணைந்த புதிய முனையங்கள் அமைகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் இப்பணி தொடங்கியது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் இப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் கரோனா வைரஸ் பாதிப்பு ஊரடங்கு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன.

அதோடு கட்டுமானப் பொருட்கள் தாமதம், நிலங்கள் கையகப்படுத்துவதில் தாமதம் காரணமாக பணிகள் தாமதமாக நடந்து தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு டிசம்பா் அல்லது வரும் ஆண்டு தொடக்கத்தில் புதிய அதிநவீன ஒருங்கிணைந்த விமான முனையம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தில் பாதுகாப்பு பரிசோதனைக்காக சுமார் 140 கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் நம்மிடம் கூறியதாவது,

”ஒருங்கிணைந்த புதிய முனையம் 5 தளங்களுடையது புதிய முனையத்தின் கீழ் தளத்தில் பயணிகளின் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரை தளத்தில் வருகை பயணிகளுக்கான இடமாகவும், இரண்டாம் தளத்தில் புறப்பாடு பயணிகளுக்கான பகுதியாகவும் இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் 140 பாதுகாப்பு பரிசோதனை கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது
சென்னை விமான நிலையத்தில் 140 பாதுகாப்பு பரிசோதனை கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளது

சென்னை விமானநிலையத்தில் தற்போதைய முனையத்தில் ஆண்டிற்கு 1.7 கோடி பயணிகள் கையாளப்படும் திறன் உடையதாக உள்ளது. ஆனால் புதிதாக அமைக்கப்படும் புதிய ஒருங்கிணைந்த முனையம், 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் உடையது. பயணிகளை கையாளும் திறன் இரு மடங்குக்கும் அதிகமாகியுள்ளது.

அதற்கு தகுந்தாற்போல் பயணிகளுக்கான வசதிகளும் அதிகரிக்கப்படுகின்றன. சென்னை விமானநிலையத்தின் தற்போதைய முனையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் செக்-இன்-கவுண்டா்கள் 64 மட்டுமே உள்ளன. ஆனால் புதிய ஒருங்கிணைப்பு முனையத்தில் 140 செக்-இன்-கவுண்டா்கள் அமைக்கப்படுகின்றன. இதில் 100 கவுண்டா்கள் முதல் கட்டமாகவும் அடுத்த 40 கவுண்டா்கள் இரண்டாம் கட்டமாகவும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்த புதிய கவுன்டர்கள் வர்ணங்கள் பூசும் பணிகள் தற்போது நடக்கிறது. அனைத்து கவுண்டா்களுக்கும் ஒட்டுமொத்தமாக காவி கலா் பூசப்படுகிறது. ஆனால் ஏற்கனவே உள்ள பழைய முனையத்தில் உள்ள செக்-இன்-கவுண்டா்கள், சிவப்பு, மஞ்சள், நீலம் என்று பல்வேறு கலா்களில் உள்ளன. ஆனால் புதிய கவுண்டா்கள் அனைத்தும் காவிக் கலரில் இருப்பதால் சென்னை விமானநிலையம் காவி மயமாகிறதா? என்ற சந்தேகம் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால் விமானநிலைய அதிகாரிகள் பயணியரை கவரும் வகையில் இந்த புதிய வா்ணம் பூசப்படுகிறது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வு: தனியார் கல்லூரிகளை அதிகளவு தேர்ந்தெடுத்த மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.