சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ரா.முத்தரசன் இன்று சந்தித்தார். அப்போது கரோனா நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அவர் ரூ. 10 லட்சம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’’ கொடிய கரோனாவை எதிர்கொள்வது சவாலான பணி. தொற்று தொடர் பாதிப்பு, மரணங்களின் எண்ணிக்கையும், அதிகமாக உள்ள நிலையில், இந்த சவாலான பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கொண்டு சிறப்பாக செயல்படுவார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
செங்கல்பட்டு அருகே 150 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலையில் கரோனா தடுப்பு தடுப்பூசி தயாரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும், அது குறித்து அலுவலர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதி அளித்ததாகவும்’’ அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்படமாட்டாது - காவல் துறை