மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தலைமையில் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், 72 கிராம மக்கள் வீடியோ கான்பிரன்சிங் மூலமாக கமல் ஹாசனுடன் உறையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அணு உலையை பொறுத்தவரை அரசு இதுவரை உண்மையை பேசியதாக தெரியவில்லை. கூடங்குளம் அணுக் கழிவுகளை எங்க வைக்கப்போறீர்கள் என்றும், அணுக் கழிவுகளை சேமிப்பதற்கு முறையாக மக்களின் கருத்துகளைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் கூடங்குளம் அணு உலையை பொருத்த வரை அதிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைவிட, செலவு அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகளிடம் கேட்டு அறிந்ததாகவும் அவர் கூறினார்.
ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விட மழை நீரை சேகரிப்பது சிறந்தது. முறையாக மழை நீரைச் சேமித்து வைத்திருந்தால் மக்கள் தண்ணீருக்காக வீதியில் இறங்கி வர தேவையில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஒரு வருடங்களாக ஷவர் வாட்டரில் குளித்ததாகவும், தற்போது பக்கெட் தண்ணீர் மட்டுமே உபயோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மனநோயாளிகள், அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும் பயனில்லை. இது போன்ற மன நோயாளிகளுக்கு சமூக வெட்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.