தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினரிடமிருந்து பணப்பட்டுவாடா, பரிசுப்பொருள்கள் விநியோகம் போன்றவற்றைத் தடுக்க தேர்தல் அலுவலர்கள், பறக்கும்படை குழு அமைக்கப்பட்டன. அவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 6) சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. தற்போது வாகன தணிக்கையில் இனி தேர்தல் அலுவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: நாமக்கல் மாவட்டத்தில் 77.91 விழுக்காடு வாக்குப்பதிவு!