ETV Bharat / state

சசிகலாவுக்குச் சொந்தமான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து - சசிகலாவுக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை ரத்து

சசிகலா
சசிகலா
author img

By

Published : Sep 23, 2021, 1:42 PM IST

Updated : Sep 23, 2021, 2:21 PM IST

13:28 September 23

சென்னையை அடுத்த பனையூரில் சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவுக்குச் சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் சசிகலாவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, பழத்தோட்டம் உள்ளது. சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டுவரும் இந்த நிலத்தின் ஒரு பகுதி (784 சதுர மீட்டர்), அருகில் உள்ள நிலத்தை சாலை விரிவாக்க திட்டத்திற்காக கையகப்படுத்த 2010ஆம் ஆண்டு நில கையகப்படுத்தலுக்கான சிறப்பு வட்டாட்சியர் நடவடிக்கையை மேற்கொண்டார்.

இது தொடர்பாக சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நிலத்திற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 2011 ஆம் ஆண்டு சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அரசு உத்தரவு ரத்து

நிலுவையில் இருந்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (செப்.23) விசாரணைக்கு வந்தபோது நெடுஞ்சாலைத் துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு அந்த நிலம் அவசியமானது என்றும், கையகப்படுத்தும் நடவடிக்கைகைகள் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிந்துவிட்டதாகவும், வழக்கு நிலுவையில் இருப்பதன் காரணமாக நிலம் இன்னும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உரிய இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சசிகலா தரப்பில், "நில இழப்பீடு தொடர்பாக எந்த ஒரு நோட்டீஸும் வரவில்லை என்றும், அது தொடர்பான கூட்டத்தில் தானோ, தனது பிரதிநிதியோ பங்கேற்கவில்லை. எனவே நிலம் கையப்படுத்தும் நடவடிக்கை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சாலை விரிவாக்கத்திற்காக சசிகலாவின் நிலத்தின் ஒருபகுதியை கையகப்படுத்தும் அரசு உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:  'ஜெ. கொண்டுவந்த திட்டத்திற்கு மட்டுமே அடிக்கல் நாட்டிவரும் திமுக!'

Last Updated : Sep 23, 2021, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.