கடந்த சில வாரங்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசிவரும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
கடைசியாக பேசிய ஆடியோவில் அவர், "ஓ பன்னீர் செல்வம் அவ்வாறு (ராஜினாமா) செய்யாதிருந்தால் அவரைத்தான் உட்கார (முதலமைச்சராக) வைத்திருப்பேன். அவராகவே அவ்வாறு செய்துவிட்டார். தமிழ்நாட்டின் எந்த இடத்தில் இருந்து என்னிடம் தொண்டர்கள் பேசினாலும் கட்சியின் மீது ஒரே குறையை கூறுகின்றனர். எல்லா சாதிக்காரர்களும் அதையே கூறுகின்றனர். அவர்களை நான் கட்டுப்படுத்தியுள்ளேன்.
ஓரிருவர் சுயநலத்துக்காக தொண்டர்களை நீக்குகிறார்கள். தொண்டர்கள் நீக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. கட்சியை காப்பாற்றதான் வந்தே தீருவேன். அதற்கான நேரம் தற்போது வந்துள்ளது. கட்சிக்காக குரல் கொடுத்த புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜுலை.18) அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் போட்டாலும் கவலையில்லை, கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் மிட்டாய் கொடுத்து குழந்தையை கூட்டி போனாலும் தாயிடமே வந்துவிடும், நிச்சயம் அனைவரையும் சந்திப்பேன்" எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: 'நீட் தேர்வு: வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள்... முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி