ETV Bharat / state

கிரெடிட் கார்டிலிருந்து நூதன முறையில் ரூ.44 ஆயிரம் திருட்டு - amount stolen from credit card

கிரெடிட் கார்டிலிருந்து நூதன முறையில் 44 ஆயிரம் ரூபாய் பணம் திருடியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருட்டு
திருட்டு
author img

By

Published : Dec 9, 2021, 9:11 AM IST

சென்னை: வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கீர்த்திகா (31). பட்டதாரியான இவர் நேற்று (டிச.7) முன்தினம் 240 ரூபாய்க்கு ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்தார்.

அதற்கான பணத்தை ஆன்லைனில் தனது எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு மூலமாக வழங்கியபோது 240 ரூபாய் பணம் செலுத்த முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதனால் கீர்த்திகா உடனடியாக வெப்சைட் மூலமாக எஸ்.பி.ஐ சேவை மையம் எண்ணைப் பெற்று தொடர்பு கொண்டார். அந்த நபர் தான் எஸ்.பி.ஐ வங்கி அலுவலர் எனப் பேசி, பிரச்சினையைத் தீர்க்க கிரெடிட் கார்டு எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

பின்னர் திடீரென கீர்த்திகாவின் செல்போன் எண்ணிற்கு எஸ்.பி.ஐ கார்டிலிருந்து 44 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சரவணா ஸ்டோர் குழும சோதனை; ரூ.1,230 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.