சென்னை முகப்பேர் கங்கை அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் ஸ்ரீ கிருஷ்ணன்(25). இவர் அதே பகுதியில் ஐஸ்கிரீம் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று (செப். 5) குடும்பத்துடன் டாடா நானோ காரில் அவரது சொந்த ஊரான மீஞ்சூரில் இருந்து முகப்பேர் வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது கோயம்பேடு அருகே வரும்போது காரின் பின்பகுதியில் உள்ள என்ஜினில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணன் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு காலையில் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
உடனடியாக இதுகுறித்து கோயம்பேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதில் காரின் பின்பக்கம் மட்டும் சேதமடைந்தன.
காரில் இருந்த யாருக்கும் காயங்கள் ஏற்படாமல் உயிர் தப்பினர். இதுகுறித்து கோயம்பேடு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.