ETV Bharat / state

அரசுப் பணத்தில் ஆளுநர் தேவையற்ற விமானப் பயணம்? - ஆர்.டி.ஐ மூலம் பதில் கிடைக்காததால் சர்ச்சை!

ஆர்.டி.ஐ ஆர்வலர் ஒருவர், தமிழ்நாடு ஆளுநரின் விமான பயணம் குறித்து ஆர்டிஐ போட்டும் பதில் கிடைக்காததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

RTI f
RTI f
author img

By

Published : Jan 23, 2023, 6:50 PM IST

Updated : Jan 23, 2023, 11:14 PM IST

அரசுப் பணத்தில் ஆளுநர் தேவையற்ற விமானப் பயணம்? - ஆர்.டி.ஐ மூலம் பதில் கிடைக்காததால் சர்ச்சை!

சென்னை: பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ ஆர்வலராக இருந்து வருகிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு தகவல்களை பெற்று தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா சொத்துக்கள் குறித்து பல்வேறு ஆர்டிஐ மனுக்கள் மூலம் தகவல் பெற்று பல உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் நரசிம்மமூர்த்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி ஏற்றதிலிருந்து தற்போது வரை எவ்வளவு முறை விமான பயணம் மேற்கொண்டுள்ளார்? - அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது அவரோடு எத்தனை பேர் பயணம் மேற்கொள்கிறார்கள்? - விமான பயணத்திற்கான காரணம் மற்றும் செலவு உள்ளிட்டவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி மனு அளித்தும், 30 நாட்களில் பதில் கிடைக்காததால், முதல் மேல்முறையீட்டு மனுவை தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்திருந்தார். அதற்கும் 30 நாட்கள் ஆகியும் பதிலளிக்காததால், இன்று(ஜன.23) இரண்டாவது முறையாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நரசிம்மமூர்த்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த நரசிம்மமூர்த்தி, "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லியில் சொகுசு பங்களா கட்டுவதால் அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆளுநர் ரவி தனிப்பட்ட விவகாரங்களுக்காக அரசுப் பணத்தில் விமான பயணம் மேற்கொள்கிறாரா? என்பது குறித்து தெரிந்து கொள்ள விமான பயணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டும் பதில் அளிக்கவில்லை.

இவ்வாறு பதிலளிக்காமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல். இந்தியாவில் பல்வேறு மாநில ஆளுநர்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்து பலரும் பதில் அளித்துள்ளனர். குடியரசுத் தலைவர், முதலமைச்சர் உள்ளிட்டோர் தொடர்பாக ஆர்டிஐ மூலம் தகவல்கள் பெற்றுள்ளேன். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ரவி குறித்த மனுவுக்கு இன்னும் தகவல் கிடைக்கவில்லை.

ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக ரவி இருந்த பொழுது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்துள்ளார். இதேபோன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்காமல் இருந்ததற்காக கர்நாடக ஆளுநர் தரப்பில் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக தற்போது போடப்பட்ட மேல்முறையீட்டு மனுவிற்கும் பதில் கிடைக்காவிட்டால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத ஆளுநர் மாளிகையின் தகவல் தரும் அலுவலருக்கு ஒவ்வொரு நாளுக்கும் 250 ரூபாய் அபராதம் என்ற அடிப்படையில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். மேலும், ஆளுநர் அரசு பணத்தில் தனிப்பட்ட தேவைகளுக்காக விமான பயணம் மேற்கொள்கிறாரா? என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக அரசாங்கம் அமைந்த இடம் அந்தமான் - பிரதமர் மோடி

Last Updated : Jan 23, 2023, 11:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.