இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபேட் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமைத் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதற்காக அனைத்து பாதுகாப்பு வசதிகள் கொண்ட கிடங்கினை மாநில அரசுகளின் நிதியின் மூலம் அமைக்க உத்தரவிட்டிருந்தது.
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் இந்தக் கிடங்கு அமைப்பதற்காக பொதுப்பணித்துறையின் மூத்த வடிவமைப்பாளரிடமிருந்து பட்ஜெட் அறிக்கை பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. பொதுப்பணித்துறை 30 மாவட்டங்களில் [சென்னை,மதுரை தவிர] இந்தக் கிடங்குகளை அமைக்க 120.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: இரு மாவட்டங்களின் ஊரகப் பகுதி சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு!