தமிழ்நாட்டின் கரோனா தொற்று தடை விதிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனளிகளுக்கு தலா ரூ.1000 வழங்க ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி சென்னை மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் தேசிய அடையாள அட்டை (நீல நிறம்) வைத்துள்ளவர்கள் 23 ஆயிரம் 841 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் இரண்டு கோடியே 34 லட்சத்து 41 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பிற மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களின் அடையாள அட்டை, ஆதார் ஆகிய ஆவணங்களை களப் பணியாளர்களிடம் சமர்ப்பித்து உதவித் தொகையை பெற்றுக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காவலாளியை தாக்கி அம்மன் கழுத்தில் இருந்த தாலி கொள்ளை!