ETV Bharat / state

ரவுடி சங்கரின் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - rowdy shankar

சென்னை : காவல் துறை என்கவுண்டரில் பலியான ரவுடி சங்கருக்கு நியாயம் கிடைக்கும்வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை: உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்...!

author img

By

Published : Aug 23, 2020, 7:52 AM IST

சென்னை, அயனாவரத்தில், பிரபல ரவுடி சங்கர் காவல் துறை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் ஐந்தாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரவுடி சங்கரின் உடல், உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் நேற்று முன்தினம் (ஆக. 21) மருத்துவமனைக்கு சென்று இறந்த ரவுடி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகாவிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் காவல் ஆய்வாளர் நடராஜன் மீது மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன், என்கவுண்டர் நடந்த நியூ ஆவடி சாலைக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு மூன்று கிலோ கஞ்சாவும் அரிவாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று (ஆக. 22) காலை மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணனின் முன்னிலையில் ரவுடி சங்கரின் உடல், உடற்கூறாய்வு செய்யப்பட்டு, காணொலிப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக சங்கரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது சகோதரி ரேணுகா தெரிவித்திருந்த நிலையில், உடற்கூறாய்வு முடிந்த பிறகு ரவுடி சங்கரின் உடலை வாங்க உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை.

ரவுடி சங்கர்
ரவுடி சங்கர்

இந்நிலையில் அவரது உடல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கரின் அயனாவரம் வீட்டிற்கு சென்று காவல் துறையினர் பார்த்தபோது, அங்கு ஒருவருமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.