சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து, காவல்துறையினருக்கிடையே நேற்று (ஜூன் 13) அவசர ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதனைத் தொடந்து, பெரியமேடு, திருவல்லிக்கேணி, எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை காவல்துறை ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர், காவல்துறை ஆணையாளர் சங்கர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்’’ இன்று காலை நான்கு மணியளவில் காக்காத் தோப்பு பாலாஜி என்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ரவுடி மீது 30 அடிதடி வழக்குகள், 17 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது, அவர் மீது காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குண்டர் சட்டத்தில் ரவுடி பாலாஜி சிறையில் அடைக்கப்படுவார்
இனி வரும் நாள்களில் காக்கா தோப்பு பாலாஜி போன்று இன்னும் 15 ரவுடிகளை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்வார்கள். விரைவில் சென்னையில் ரவுடிகள் ஒழிக்கப்படுவார்கள்’’ எனக் கூறினார்.
இதையும் படிங்க: பணி வேண்டி கோரிக்கை ஒருபுறம், கரோனாவுக்காக தங்க சங்கிலி மறுபுறம்?