ETV Bharat / state

நிவர் புயல்: தாம்பரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி - Residential areas in tambaram flooded

சென்னை: ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று (நவ.24) முதல் தற்போதுவரை பெய்து வரும் கனமழையால் வீடுகள் முழுவதும் மழை நீர் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

தாம்பரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

author img

By

Published : Nov 24, 2020, 12:21 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் கென்னடி தெருவில் இருக்கும் வீடுகளில் நேற்று (நவ.23) முதல் தற்போதுவரை பெய்து வரும் கனமழையால் வீடுகள் முழுவதும் மழைநீர் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

இதனால் தரைப்பகுதியில் இருக்கும் வீட்டில் வசித்து வந்த நபர்கள் தற்போது வேறு இடத்திற்கு சென்று தஞ்சமடைந்துள்ளனர். ராமகிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஏரிக்கு மழைநீர் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்து வருவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தாம்பரத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

உடனடியாக அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் செம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் கலங்கள் மூலம் உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சென்னையில் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.