ETV Bharat / state

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 108 படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
author img

By

Published : Jan 21, 2022, 10:35 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.20) தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர், மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும்.

2. கடந்த வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி வழங்கப்படும்.

3. இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாடு மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முதலமைச்சரிடம் வலியுறுத்தினார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், எம்.பி.க்கள் மூலம் வலியுறுத்தியதையும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் விளக்கி கூறினார்கள்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு துணை தலைவர் கனிமொழி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரம் பெற்று - தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருடன், மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்படி முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செல்லப்பிராணிகள் வளர்க்கும் விதம் பற்றிய விதிகள் - சென்னை உயர்நீதிமன்றம் வரவேற்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.