ETV Bharat / state

முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு - ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுச் செய்யப்பட்ட 240 முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்குநாளை பணி நியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு

author img

By

Published : Oct 12, 2022, 5:22 PM IST

சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 240 முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்குப் பணி நியமன கலந்தாய்வு நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21 முதல் 2022-23 ம் முடிய உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2,849 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை 1 காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர்கள் தேர்வு செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வேதியியல் பாடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இந்தப் பணிநாடுநர்களுக்கு நேரடி நியமன கலந்தாய்வு 13 ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேதியியல் பாடத்திற்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தங்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் மற்றும் அனைத்துக் கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் கலைவாணர் அரங்கிற்கு 13 ந் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவத்துறையில் 1,021 காலிப்பணியிடங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.