ETV Bharat / state

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கடிதம் - டி.ஆர்.பாலு அழைப்பு - TR Balu

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி கடிதம் - டி.ஆர்.பாலு அழைப்பு

author img

By

Published : Nov 2, 2022, 10:01 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுக இடையே தொடர்ச்சியாக பல்வேறு முரண்பாடுகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

எனவே திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திமுக பொருளாளரும் திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.

திமுகவின் கருத்தில் உடன்படுகின்ற ஒத்த கருத்துடைய உறுப்பினர்கள், அந்த அறிக்கையை படித்துப் பார்த்து கையொப்பமிட திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஆளுநர் இன்னொரு அண்ணாமலையாக ஆக வேண்டாம்; தமிழ்நாடு பாஜக தாங்காது!' - முரசொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.