தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைக்காக கொள்முதல் செய்யப்பட்ட 24 ஆயிரம் ரேபிட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுவதாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர், "ஐ.சி.எம்.ஆர் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பெற்றுள்ள 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் திருப்பி அனுப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசுக்கு எந்த ஒரு செலவினமும் ஏற்படவில்லை. இதுதவிர, மீதமுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றைத் தடுக்க அரசு தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், மக்களின் பொதுச் சொத்தான கருவூலத்தை கரையான் அரிக்கும் காரியம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது பொய்ப்பிரசாரம்.
அதிமுக அரசின் மீது தொடர்ந்து உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அரசியல் லாபம் அடைய முயற்சி மேற்கொள்வதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒன்றறை கோடி மாஸ்க் தயாரிக்கும் பணி தீவிரம் - விஜயபாஸ்கர்!