ETV Bharat / state

ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளில் மோசடி... திடுக்கிடும் பின்னணி...

ரயில்வே தட்கல் டிக்கெட்கள் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட பிகாரை சேர்ந்த இளைஞரை திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளில் மோசடியில் ஈடுபட்டவர் கைது - திடுக்கிடும் பின்னணி

author img

By

Published : Sep 25, 2022, 10:43 AM IST

ரயில்வே தட்கல் டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினருக்கு புகார்கள் குவிந்துள்ளன. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிகார் மாநிலம் தனபூர் பகுதியில் வசித்து வந்த சைலேஷ் யாதவ் (27) என்பவரை திருவண்ணாமலை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சைலேஷ் யாதவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சைலேஷ் யாதவ் தனியாக tatkalsoftwareall.in என்ற வெப்சைட்டை உருவாக்கி, ரயில்வே டிக்கெட் பதிவு செய்யும் தரகர்களுக்கு SHARP, NEXUS, BMX PLUS உள்பட 10 சட்டவிரோத சாப்ட்வேர்களை ஆயிரக்கணக்கான நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

ரயில்வே தட்கல் டிக்கெட்கள் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த இளைஞரை திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
ரயில்வே தட்கல் டிக்கெட்டுகளில் மோசடி... திடுக்கிடும் பின்னணி...

குறிப்பாக இந்த சட்ட விரோத சாப்ட்வேர்கள் மூலம் ஒவ்வொரு நாளைக்கும் 7,000 டிக்கெட் புக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் மட்டும் 1,25,460 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு 56 கோடியே 45 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். ஒரு சாப்ட்வேரை 2,000 முதல் 3,500 ரூபாய் வரை ஆன்லைன் மூலமாக சைலேஷ் யாதவ் விற்பனை செய்துள்ளார். அதேநேரம் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதற்கு TSA group என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்து பயிற்சி அளித்துள்ளார். இவை தவிர Telegram மற்றும் whatsapp ஆகியவை மூலமாகவும் சாப்ட்வேர் வாங்கும் நபர்களுக்கு சைலேஷ் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

Anydesk போன்ற சாப்ட்வேர் மற்றும் செயலிகளை பயன்படுத்தி அவற்றை வாங்குபவர்களுக்கு, தான் இருந்த இடத்திலிருந்து இந்தியா முழுவதும் சாப்ட்வேர் குறித்து பயிற்சி அளித்துள்ளார். மேலும் சர்வதேச எண்களை வைத்து வெளிநாட்டில் இருந்து இந்த சாப்ட்வேர்களை வாங்கி சைலேஷ் தனது வெப்சைட் மூலம் விற்பனை செய்துள்ளார்.

இந்த சாப்ட்வேர் ஐடிகளை சுமார் 3,485 பேருக்கு விற்பனை செய்து, கடந்த 9 மாதத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் சம்பாதித்துள்ளார். அதில் மூன்று லட்சம் ரூபாய் கமிஷனும் வாங்கியுள்ளார். மேலும் ஒரு லட்சம் ஐஆர்சிடிசி போலி யூசர் ஐடிகளையும் வெப்சைட், வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் மூலமாக விற்பனை செய்துள்ளார்.

சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதற்கு TSA group என்ற பெயரில் தொடங்கப்பட்ட யூடியூப் சேனல்

இந்த சட்டவிரோத சாப்ட்வேர்கள் மூலம் ஐஆர்சிடிசி வெப்சைட்டில் பாதுகாப்பு அம்சங்கள் மீறி நொடிப் பொழுதில் டிக்கெட்டுகளை பதிவு செய்தல், பிளாக் செய்தல், பயண விவரங்களை தானாக பதிவிடுதல் உள்ளிட்டவற்றை செய்ய முடியும். இந்நிலையில் கைது செய்யப்பட்ட சைலேஷ் யாதவிடமிருந்து 13 போலி மொபைல் நம்பர்கள், இரண்டு சர்வதேச எண்கள், நான்கு போலி வங்கி கணக்குகள் உள்பட சில போலி அடையாள அட்டைகளை ரயில்வே ஆர்பிஎப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் சைலேஷ் யாதவ் வெப்சைட்டை ஆய்வு செய்து, சட்டவிரோத சாப்ட்வேர்களை வாங்கியவர்கள் பட்டியல் மற்றும் அவர்களது பணம் செலுத்திய யூபிஐ ஐடி, இமெயில் ஐடி, செல்போன் எண்கள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட சைலேஷ் யாதவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சார்ஜ் போட கொடுத்த செல்போன் மூலம் நூதன முறையில் 3 லட்சம் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.