ETV Bharat / state

சென்னை: கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு - கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு

சென்னையில் இருந்து புறப்பட்ட கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது.

கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு
கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு
author img

By

Published : Dec 2, 2022, 10:48 AM IST

Updated : Dec 2, 2022, 11:01 AM IST

சென்னை: சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 3:20 மணிக்கு கத்தார் நாட்டு தலைநகர் தோகாவுக்கு கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த விமானம் தினமும் அதிகாலை 1:30 மணிக்கு தோகாவிலிருந்து சென்னை வந்துவிட்டு மீண்டும் புறப்பட்டு செல்லும். அதை போல் இன்று (டிச.2) அதிகாலை 1:30 மணிக்கு தோகாவில் இருந்து சென்னைக்கு வந்தது.

இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்ல 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை சுங்க சோதனை அனைத்தும் முடித்துவிட்டு தயார் நிலையில் இருந்தனர். விமானம் வந்ததும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அதன் பின்பு 139 பயணிகள், விமான ஊழியர்கள் 7 பேர் மொத்தம் 146 பேருடன் விமானம் புறப்பட தயாரானது.

அதிகாலை 3:50 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்திவிட்டார்.

இதை அடுத்து விமானத்தை இழுவை வண்டி மூலம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு இழுத்து கொண்டு வரப்பட்டது. விமான பொறியாளர்கள் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காலை 6 மணி வரை விமானம் பழுதுபார்க்கப்படவில்லை. விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கி விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விமான பழுது பார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவாக, விமானம் பழுதுபார்க்கப்பட்டு புறப்படும் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு பழுது பார்க்கப்பட முடியவில்லை என்றால் பயணிகளை ஹோட்டல்களில் தங்க வைத்துவிட்டு, இன்று இரவு அல்லது நாளை அதிகாலை தான் விமானம் புறப்பட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் 139 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு தகுந்த நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: ராட்சத கிரேன் மோதி அரசு பேருந்து சேதம்

Last Updated : Dec 2, 2022, 11:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.