ETV Bharat / state

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார்.. ஈபிஎஸ் தரப்பில் பேச தயாரா ? - புகழேந்தி

author img

By

Published : Jun 22, 2022, 8:03 AM IST

Updated : Jun 22, 2022, 10:08 AM IST

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார் என்ற நிலையிலும் ஈபிஎஸ் தரப்பில் பேச தயாராக இல்லை என முன்னாள் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு அருகதை இல்லை - புகழேந்தி OR பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார்.. ஈபிஎஸ் தரப்பில் பேச தயாரா ? - புகழேந்தி

சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி சந்தித்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட, ஒன்றிய, கிளை சார்பாக வாக்குபெட்டி வைத்து வாக்கு செலுத்தி, தேர்வு செய்தால் தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என தெரிந்துவிடும்.

ஆனால் அதற்கு ஈபிஎஸ் தரப்பு தயாராக இல்லை. பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார் என்ற நிலையிலும் ஈபிஎஸ் தரப்பில் பேச தயாராக இல்லை. முதலமைச்சர் பதவி, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஓபிஎஸ் விட்டு கொடுத்தார். அவர் என்ன தவறு செய்தார். பொதுக்குழு பற்றிய தகவல்களை ஓபிஎஸ் தான் கூற வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார்.. ஈபிஎஸ் தரப்பில் பேச தயாரா ? - புகழேந்தி

ஈபிஎஸ் தலைமையில் தொடர்ந்து தேர்தலில் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதற்கு பெயர் தான் ஆளுமையா?. ஜெயக்குமார் என்னை புரோக்கர் என கூறியதாக அறிந்தேன். ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது என்னுடைய சொத்தை பிணையத் தொகையாக (surety) கொடுத்த புரோக்கர் நான் தான்.

என்னைப் பற்றி பேசுவதற்கு ஜெயக்குமாருக்கு அருகதை இல்லை. ஓபிஎஸ் பக்கம் இருப்பவர்கள் சந்தர்பவாதிகள் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார். தர்மயுத்தம் நடத்தும் போது அவர் யார் பக்கம் இருந்தார். இப்போது ஏன் ஈபிஎஸ் பக்கம் சென்றார். இது சந்தர்ப்பம் என்றால் கே.பி.முனுசாமி தற்போது செய்வது என்ன.?" என்றும் புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம்: பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்...

Last Updated : Jun 22, 2022, 10:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.