ETV Bharat / state

நெருங்கும் பொதுத்தேர்வு: முன்னேற்பாடுகள் தீவிரம்! - dpi

சென்னை: பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளியில் உள்ள அறைகளின் சுவர், கரும்பலகை, இருக்கையை சுத்தம்செய்ய அரசுத் தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

dpi
dpi
author img

By

Published : Feb 24, 2020, 5:18 PM IST

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் இரண்டாம் தேதி தொடங்கவுள்ளது. இந்தத் தேர்வினை மாணவர்கள் எழுதுவதற்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள பள்ளிகளைச் சுத்தம் செய்துவைக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்குப் பொறுப்பு ஏற்கும் தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு தொடங்கும் நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள துறை அலுவலர், எழுத்தர், அலுவலக உதவியாளருடன் தேர்வு மையத்திற்குச் செல்ல வேண்டும்.

தேர்வு மையத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அனைத்து அறைக் கண்காணிப்பாளர்களும் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தேர்வறைகள் எவ்விதப் பாதிப்புமின்றி தேர்வெழுதக்கூடிய தேர்வர்களுக்கு எவ்வித பாதிப்பையும், ஆபத்தையும் ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் உள்ளதா? என்பதையும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தவறாமல் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தேர்வறைகளின் சுவர், கரும்பலகை, இருக்கைகளில் எவ்விதமான பாட சம்பந்தப்பட்ட விவரங்களும் இல்லாதபடி சுத்தம் செய்யப்பட வேண்டும். காலை 8.30 மணிக்கு மேல் தேர்வு மையமாகச் செயல்படும் பள்ளியைச் சார்ந்த எந்த ஒரு பணியாளரும் (பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட) தேர்வு மைய வளாகத்தில் கண்டிப்பாக இருத்தல் கூடாது. எக்காரணங்கொண்டும் அதே பள்ளியின் பணியாளர்களை அலுவலகப் பணிக்கு உட்படுத்தக்கூடாது.

தேர்வுகள் நடைபெறும் நாள்களில் தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்கள் செல்போன் எடுத்துவர முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. தேர்வுக்குப் பயன்படுத்தப்படும் சுவர் கடிகாரம் அனைவருக்கும் தெரியும் வகையில் தேர்வுக்கட்டுப்பாட்டு அறையில் பொருத்தப்பட வேண்டும்.

விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு விடைத்தாள் அனுப்பப்படும் வரை தேர்வுமையங்களுக்குள் வெளியாள்கள் உள்ளே வருதல் கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் பார்க்க: 'கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர் கல்வி பயிலும் மாநிலம் தமிழ்நாடு'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.