ETV Bharat / state

ஆன்லைன் வகுப்புகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! - Fees for online class at private school

சென்னை: தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புக்கு கட்டணம் வசூலித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு
ஆன்லைன் வகுப்பு
author img

By

Published : Jun 12, 2020, 2:16 PM IST

Updated : Jun 12, 2020, 2:35 PM IST

இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ”வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஏப்ரல் 20ஆம் தேதி அன்று வெளியிட்ட அரசாணை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது.

அந்த அரசாணையின் மீது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கக் காலத்தில், பள்ளி மாணவர்களிடம் 2019-20ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக் கட்டணம், 2020-21ஆம் ஆண்டிற்கான கல்விக்கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்த கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்திப்பதாகப் புகார் பெறப்பட்டுள்ளது. அரசாணையை மீறி கல்விக்கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பிய மாணவிக்கு கிடைத்தது பிணை

Last Updated : Jun 12, 2020, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.