பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைக்க பிரதமர் மோடி பிப்ரவரி 14ஆம் தேதி தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட அவர் பின் கேரளா கிளம்பி சென்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகிறார். பிப்.25ஆம் தேதி கோயம்புத்தூர் வரும் அவர், அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். புதுச்சேரி மாநிலத்திற்கும் சென்று அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மோடி வருகையையொட்டி பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு டிஜிபி திரிபாதி காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா டைம்ல பெட்ரோல் விலை ஏறுறது சகஜமப்பா - அளந்துவிட்ட எல். முருகன்