ETV Bharat / state

சாதி கயிறு விவகாரம்: அரசு நடவடிக்கை! - சாதி கயிறு விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை

சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில், மாணவர்கள் கைகளில் கையிறு கட்டக்கூடாது என முதன்மை கல்வி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

caste rope  caste band issue  circular about caste rope  primary education officer circular  primary education officer circular about caste rope  சாதி கயிறு விவகாரம்  சாதி கயிறு விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை  சாதி பிரச்சனை
சாதி கயிறு விவகாரம்
author img

By

Published : May 5, 2022, 7:27 PM IST

சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் கைகளில் சாதி கயிறு கட்டியதால் ஏற்பட்ட தகராறில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடம் தற்போது வன்முறை அதிகரித்து வருகிறது. கைகளில் சாதியை அடையாளப்படுத்தி கட்டப்படும் கயிற்றால் மேலும் பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில், தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள உத்தரவில், “2019ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட உத்தரவின்படி, பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல சாதிக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் போதும் மற்றும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் பொழுதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாகவும் தெரிய வருகிறது.

caste rope  caste band issue  circular about caste rope  primary education officer circular  primary education officer circular about caste rope  சாதி கயிறு விவகாரம்  சாதி கயிறு விவகாரம் குறித்து அரசு நடவடிக்கை  சாதி பிரச்சனை
அரசின் நடவடிக்கை

எனவே, மாணவர் நலன் கருதி தலைமையாசிரியர்கள் இதில், தனிக்கவனம் செலுத்தி பள்ளியின் காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி, அவ்வாறு சாதிப் பிரிவினையைத் தூண்டுவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரித்திட வேண்டும்.

மேலும் இவ்வகையான கயிறு அணிவதை தடுக்க வேண்டும்” என அனைத்துவகைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்களின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என பெற்றோர் கவலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.